காலையில் எழுந்தவுடன் உடல் ஆரோக்கியத்திற்காக சில பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
காலையில் எழுந்தவுடன் சூரிய ஒளியைஉங்கள் உடல் பெற வேண்டும். காலை 10 மணிக்கு முன்னதாக 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பது தூக்கத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இரவில் தூக்கத்திற்கு முன்பும் சரி, காலையில் எழுந்தவுடனும் சரி பெரும்பாலும் அனைவரின் கையிலும் போன் இருக்கும். காலை எழுந்ததும், இரவு தூக்கத்திற்கு முன்பும் குறைந்தது 45 நிமிடங்களுக்கு ஸ்மார்ட்போனைப் பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
காலையில் எழுந்தவுடன் சிறிது நேரம் நடப்பது, ஓடுவது என லேசான உடற்பயிற்சிகளைச் செய்வது மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
காலை உணவைத் தவிர்ப்பது மிகவும் மோசமானது என்று அறிவுறுத்தும் மருத்துவர்கள், காலை உணவை சீக்கிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
சமச்சீரான உணவு வேண்டும். நள்ளிரவு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.