குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிறையும். வழக்குகளில் தாமதங்கள் நீங்கும்.உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் நற்பெயரெடுப்பீர்கள். கலைத்துறையினர் புதிய பயிற்சிகளைக் கற்றுக்கொள்வீர்கள்.பெண்கள் உற்றார், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். மாணவர்கள் நன்றாகப் படித்து தேர்வுகளை எதிர்கொள்வீர்கள்.சந்திராஷ்டமம் - மார்ச் 09, 10, 11.
பொருளாதாரச் சிரமங்கள் குறையும். பேச்சினால் ஆதாயங்களைப் பெறுவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வை அடைவீர்கள். வியாபாரிகள் எதிர்பாராத வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டீர்கள். கலைத்துறையினருக்குத் தடைபட்ட பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படும். பெண்களுக்கு கணவருடன் புரிதலும் அன்பும் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் இருப்பீர்கள்.சந்திராஷ்டமம் - மார்ச் 12.
வருமானம் சிறப்பாக இருக்கும். உடல் உபாதைகள் நீங்கும். போட்டிகளில் வெற்றி காண்பீர்கள்.உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் அலுவலகத்தில் சுழன்று வேலை செய்வீர்கள். வியாபாரிகளுக்குக் கூட்டாளிகளால் நன்மை உண்டாகும்.கலைத்துறையினர் சக கலைஞர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். பெண்களுக்கு சேமிப்பு தொடர்பான புதிய சிந்தனைகள் உண்டாகும். மாணவர்கள் ஆசிரியர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலை திறம்பட நடத்துவீர்கள். மனதில் பல சிந்தனைகள் உண்டாகும். தடைபட்டிருந்த பயணங்களைச் செய்வீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் கட்சியில் முக்கியத்துவத்தைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.பெண்கள் பெற்றோரது உதவிகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த குழப்பங்கள் குறையும்.சந்திராஷ்டமம் - இல்லை.
வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். தொழிலில் புதிய எண்ணங்களைச் செயல்படுத்துவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களை முன்னிலைப்படுத்தி நற்பெயரெடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு பணவரவு உண்டாகும்.பெண்கள் தக்க நேரத்தில் மருத்துவம் செய்து கொள்வீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த பாடப்பிரிவுகளில் சேருவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் நட்பும், ஆதரவும் நன்றாக இருக்கும். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு உதவி செய்வீர்கள். பெண்களின் கௌரவம், அந்தஸ்து குடும்பத்தில் உயரும். மாணவர்களுக்கு சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
பொருளாதாரம் சீராக இருக்கும். அரசு வழியில் ஆதாயங்களும் பூர்விகச் சொத்துகளும் கிடைக்கும்.உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகள் சிறப்பாகத் தொண்டாற்றுவார்கள். கலைத்துறையினரின் திறமைகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.மாணவர்கள் சோம்பலை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு படிப்பில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். உங்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். வெளிவட்டாரத்தில் நல்ல பெயரெடுப்பீர்கள்.உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைத்து முன்னேறுவீர்கள். அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பெருமை உண்டாகும்.பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
பொருளாதாரம் ஏற்றமாக இருக்கும். பழைய கடன்களைத் திருப்பி அடைக்கத் தொடங்குவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் போட்டிகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் சீரிய கவனம் செலுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் திரும்பக் கிடைக்கும்.பெண்களுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். மாணவர்கள் பெற்றோரின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணப்பழக்கம் நன்றாக இருக்கும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் சிறப்பான பதவிகள் கிடைக்கும்.கலைத்துறையினர் மனதுக்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் தேர்வில் முதலாவதாக வருவார்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
இல்லத்துக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். சமுதாயத்தில் உங்கள் பெயர், அந்தஸ்து கூடும். சொல்வாக்கு உயரும்.உத்தியோகஸ்தர்களிடம் சக ஊழியர்கள் நட்போடு நடந்து கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு பெருகும். கலைத்துறையினர் சக கலைஞர்களால் லாபம் அடைவீர்கள்.பெண்கள் புதிய வீட்டுக்கு மாறுவீர்கள். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.சந்திராஷ்டமம் - மார்ச் 06.
பொறுமையுடனும் பொறுப்புடனும் உங்கள் கடமைகளை ஆற்றி வெற்றி பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும்.உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளைக் கவருவீர்கள். அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினருடன் நட்புடன் இருப்பீர்கள்.கலைத்துறையினர் விழிப்புடன் இருந்து ஒப்பந்தங்களை நிறைவேற்றுவீர்கள்.பெண்கள் குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பீர்கள். மாணவர்களிடம் ஆசிரியர்கள் கனிவாகப் பழகுவார்கள்.சந்திராஷ்டமம் - மார்ச் 07, 08.