அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள ஹோர்முஸ் நீரிணை, இந்தியாவில் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான முக்கிய கடல்சார் வழித்தடம். ஈரான் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது .
தற்போது இந்த ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் அவ்வழியாகச் செல்லும் கப்பல்களை ஈரான் குறிவைப்பதால் சரக்கு கப்பல்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
போரால், கப்பல் போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது. சுமார் 4 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்ய முடியாமல் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் சில நாள்களுக்குப் போர் தொடர்ந்தால் பாதிப்பு இன்னும் மோசமாகும் என்று உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதேநேரத்தில் உள்நாட்டு சந்தையில் பாசுமதி அரிசி தேங்கியுள்ளதால் அதன் விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த சில நாள்களில் இந்தியாவில் பாசுமதி அரிசி விலை 10% குறைந்துள்ளது. வரும் நாள்களில் இது உள்நாட்டுச் சந்தையில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.