அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதற்காக யுரேனியத்தை செறிவூட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இது நடந்தால் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு ஈரானால் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும்.
மூன்று கட்டங்களாக அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தியும்கூட, சுமுக உடன்பாடு ஏற்படவில்லை.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக, அண்டை நாடுகளுக்கு பல தொல்லைகளைத் தருவதாக இந்தப் போரை மாற்றிவிட வேண்டும் என்று ஈரான் கருதுகிறது.