அறுபதிலிருந்து இருபது வரை...

நடுப்பக்கம்

உலக நாடுகளில் குடியேறியுள்ள இந்தியர்கள் இந்த விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தியதன் விளைவாக அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து நாடுகளிலும் கிரிக்கெட் விரிவடைந்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டுக்கு காரணகர்த்தா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் கெர்ரி பேக்கர்' என்ற தனவான். சேனல் 9 என்ற பெயரில் விளையாட்டுகளுக்கான பிரத்யேக தொலைக்காட்சி சேனல் அவரது முயற்சியால் நிறுவப்பட்டது. 1970-களில் அவரதுதொலைக்காட்சி நிறுவனத்துக்கு டெஸ்ட் போட்டிகளைக்காட்சிப்படுத்தும் உரிமை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வழங்கவில்லை. இதை சவாலாக ஏற்று ஒரு புதிய கிரிக்கெட் போட்டியை பகல்-இரவு மற்றும் குறைந்த ஓவர்கள் கொண்ட ஆட்டமாக தொடங்கினார்.

சிவப்புப் பந்துக்குப் பதிலாக வெள்ளைப் பந்து, அணி வீரர்களுக்கு வெள்ளைச் சீருடைக்குப் பதிலாக வெவ்வேறு நிற உடைகள், விளையாட்டு வீரர்களைக் கவர அதிக பரிசு என்று அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி 60 ஓவர்கள் ஆசிய தட்பவெப்பநிலைக்கு சரிவராது என்று அந்தப் போட்டிகள் இங்கிலாந்து-ஆஸ்திரேலியாவில்தான் நடத்த வேண்டும் என்று அந்த இருநாடுகளின் ஆதிக்கத்தில் இருந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவெடுத்தது.

1983-இல் நடைபெற்ற 60 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளில் சில அணிகளே 200 ரன்கள் எடுத்தன. ஆனால், இப்போது இருபது ஓவர்போட்டிகளிலேயே 200-க்கும் அதிகமானான்களை பல அணிகளும் குவிக்கின்றன. அதிக ரன்களை எடுக்க வேண்டுமென்றால் அதிகபட்சமாக ஒரு பந்தில் ஆறு ரன் எடுத்தால்தான் ரன்களைக் குவிக்க முடியும். திறமையான பேட்டர்களும் சிக்ஸர் அடிப்பதற்கு நல்ல பயிற்சி எடுத்து மைதானத்தில் விளாசுகிறார்கள்.

எந்த வெற்றியும் உழைப்பில்லாமல் வராது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேரளத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் நடைபெற்று முடிந்த டி 20 உலகக் கோப்பைப் போட்டிகளின் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...