இன்று திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம் முழிக்க வேண்டியதிருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6
இன்று சீரான பலனை காண்பீர்கள். பதவிகள் வந்து சேரும். விடாமுயற்சியுடன் உழைப்பது நல்லது. அதிகமாக தூரம் செல்ல வேண்டியதிருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து நற்பலனை பெறலாம். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பிரவுண்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
இன்று அதிகமாக சிரத்தை எடுத்து மேலிடத்திற்கு விஷயங்களை சொல்ல வேண்டியதிருக்கும். முன்னேற்றத்திற்கு வழி காண்பீர்கள். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
இன்று பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9
இன்று பங்குதாரர்களிடம் யதார்த்த நிலையை கடைபிடிக்கவும். எந்தவொரு விஷயத்திலும் ஆராய்ந்து முடிவெடுக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். மிக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: வெண்மைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5
இன்று இரவு நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். வெளியூர் சென்று தங்கியிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
இன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9
இன்று குறுக்கு வழியில் சென்று எந்தச் செயலையும் செய்யாமல் நேர் வழியில் சிந்தித்து செயல்படுங்கள். உடல் ஆரோக்கியம் ஓரளவு சீராக இருந்தாலும் வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு ஆட்பட நேரிடலாம். உங்கள் பேச்சினால் பகையை சந்திக்க நேரிடும். கணக்கு வழக்குகளில் சிறு சிக்கல்கள் தோன்றும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
இன்று தொழிலில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ப்ரவுண்அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9
இன்று உயர் பதவிகள் கிடைக்க கூடும். இருப்பினும் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியதிருக்கும். அதீத உழைப்பு செய்ய வேண்டியதிருக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். எதிலும் கருத்து சொல்லும் முன் யோசித்து சொல்வது சிறப்பு.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7
இன்று குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்க வழிவகை நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9
இன்று பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை என இருக்கும். குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 6, 9