கண்கள் அடிக்கடி துடிப்பதற்கு இதுதான் காரணம்!

சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக கண்கள் அடிக்கடி துடிக்கும். வழக்கமானதைவிட சில நேரங்களில் அதிகமாகத் துடிக்கும்போது அதனைக் கவனிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கண்களை அதிகமாக சிமிட்டுவது ஒன்றும் நோயல்ல. ஆனால் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களினால் நிகழ்வதாகவும் அதனைச் சரிசெய்துகொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்கள்

கண்கள் அதிகமாக துடிப்பதற்குக் காரணங்கள், சரியான தூக்கம் இல்லாதது, அதிகமாக டிவி, ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது, பதற்றம், உடல் இயக்கத்தைத் தூண்டும் காஃபின் போன்ற உணவுப்பொருள்களை அதிகம் சாப்பிடுவது, கண்களில் வறட்சி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற ஊட்டச் சத்துகள் குறைவாக இருப்பது.

மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் கண்கள் அதிகமாக துடிக்கும். அதனால் மன அழுத்தத்தை சரியான அளவில் நிர்வகிப்பது முக்கியம்.

கண்களைத் திறக்கும்போது மூடும்போது அதிக அழுத்தம், தசைப் பிடிப்பு போன்ற நிலை, கண்கள் வீக்கம், சிவப்பாதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

ஏனெனில் கண்களில் நரம்பியல் தொடர்பான பிரச்னைகள் இருக்கலாம். ஏனெனில் கண் சிமிட்டுவது மூளைத் தண்டுடன் நரம்புகள் வழியாக தொடர்புடையது.

இதனை சரிசெய்ய கண்களுக்கு அவ்வப்போது பயிற்சியும் ஓய்வும் கொடுக்க வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தூரமாக பார்ப்பது, கண்களை மற்ற திசைகளில் சுழற்றுவது எனச் செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...