ஒரு சிட்டிகை(பின்ச்) கூடுதல் உப்புகூட ரத்த அழுத்தத்தைப் பாதிக்கும் என்றும் உப்பை அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உப்பு என்பது உயர் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது, ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதில் உப்பின் பங்கு இருக்கிறது என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு குறைவான உப்பையே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.
வெப்ப காலங்களில் வியர்வை அதிகம் வெளியேறுவதால் உடலுக்கு அதிகமாக உப்பு தேவைப்படலாம். கணினியில் அமர்ந்து வேலை செய்வோருக்கு குறைவான உப்பு போதுமானது, வெயிலில் வேலை செய்வோருக்கு அதிக உப்பு தேவைப்படும் என்கின்றனர்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவரின் ரத்த அழுத்தம் 5-10 mmHg வரை குறையும்.
ரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் ஊறுகாய், அப்பளம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். சமைத்த உணவுகளில் மீண்டும் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.