குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுமா?

மன அழுத்தம் என்பது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். மனச்சோர்வு ஏற்படுவதற்கும் பலவீனமாக இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மரபியல், சுற்றுச்சூழல், குடும்பச் சூழல், பணியிடத்தில் அழுத்தம் ஆகிய காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

குழந்தைகளும் வளர்கின்ற சூழலைப் பொருத்து மனநலப் பிரச்னைகள் வரலாம். மனநலப் பிரச்னைகள் 50% பேருக்கு குழந்தை பருவத்தில் இருந்தே தொடங்குகின்றன என்கின்றார்கள் நிபுணர்கள்.

குழந்தைகளுக்கு வீட்டில் பிரச்னைகள், பள்ளியில் படிப்பின் மீதான அழுத்தம், பிற மாணவர்களுடன் ஒப்பீடு, ஏற்றத்தாழ்வு, ஏதேனும் துன்புறுத்தலுக்கு ஆளாதல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படலாம்.

குழந்தைகள் அதிகமாக ஸ்மார்ட்போன் அதிகமாக உபயோகிப்பதாலும் டிவி அதிகமாக பார்ப்பதாலும்கூட மன அழுத்தம் ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளாலும் மன அழுத்தம் ஏற்படலாம்.

எனவே, குழந்தைகளுடன் தினமும் பெற்றோர்கள் சிறிது நேரம் செலவழித்து அவர்களின் பிரச்னைகளைக் கேட்டு சரிசெய்ய வேண்டும்.

குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிசெய்ய மன அழுத்தத்தை விரைவாகக் கண்டறிந்து சரிசெய்வது சிறந்தது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...