தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது.
சீரகத்தில் உள்ள இரும்புச் சத்து மாதவிடாய் வலியைத் தீர்க்கும். ரத்தச் சோகையைத் தடுக்கும். இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.
செரிமான பிரச்னைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும். அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். மலச் சிக்கலைத் தீர்க்கும்.
வயிற்றுவலிக்கும் தீர்வு தரும். கர்ப்பிணி பெண்களும் சீரக நீர் பருகலாம். பால் சுரப்பையும் ஊக்குவிக்கும் தன்மை கொண்டது.
சுவாசக் குழாய் சளியை அகற்றும். சீரக நீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும். உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் சீரக நீரை குடிப்பது நல்லது.
இதில் உள்ள வைட்டமின் ஈ, இளமையைத் தக்க வைக்கும். சருமத்தை பளபளப்பாக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
உடலில் நச்சுகளை வெளியேற்றுகிறது. இரும்பு சத்து குறைபாட்டையும் சீரக நீர் சரிசெய்யும். பித்தப்பை, கல்லீரலுக்கு நல்லது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கு சீரகம் அவசியம்.