மாதுளையில் இவ்வளவு நன்மைகளா?

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் சி,கே மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு சிறந்த உணவுப்பொருள் மாதுளை.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது.

சளித்தொல்லைக்குத் தீர்வு கிடைக்க மாதுளம் பழச்சாறு குடித்து வந்தால் போதும்.

தேனுடன் மாதுளம் பழச்சாறு கலந்து ஒரு மாத காலம் குடித்து வந்தால், ரத்த சோகை நோய் நீங்கும்.

வயிற்றில் குவிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மையுடையது மாதுளை. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கும் மாதுளை துணை புரியும்.

மாதுளம் பழம் தினமும் சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பாகும், நினைவாற்றல் மேம்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...