பாரிஸில் செயல்படும் உலக சமத்துவமின்மை ஆய்வகம் 200-க்கும் மேற்பட்ட அறிஞர்களின் உதவியோடு தயாரித்த உலக சமத்துவமின்மை அறிக்கை-2026 வருமானம், சொத்து, பாலினம், வாங்கும் திறன் உள்ளிட்டவற்றில் உலக அளவிலும் இந்தியாவிலும் அதிக அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை வெளிக்கொணர்ந்துள்ளது.
உலகின் வளர்ச்சியானது சமூகத்தில் பொருளாதார சமநிலையை ஏற்படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. உலக மக்கள்தொகையில் 10% நபர்களின் வருமானம் மீதமுள்ள 90% மக்களின் வருமானத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
கீழ்த்தட்டில் உள்ளவர்களின் சொத்துகளைவிட இரண்டு மடங்கு அதிகமாக செல்வந்தர்களின் சொத்துகள் வளர்ந்துள்ளது. ஊதியம் வழங்கப்படுவதிலும் பாலின ரீதியான ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. குறிப்பாக, அமைப்புசாரா துறையில் அதிகமாக உள்ளன என அறிக்கை கூறுகிறது.ஊதியம் இல்லாத வீட்டு வேலை செய்யும் நேரத்தையும் சேர்த்தால் பெண்கள் வாரத்துக்கு சராசரியாக 53 மணி நேரம் உழைக்கிறார்கள்.
மக்கள் நலன் நாடும் அரசாகச் செயல்படுவதற்கு தேவையான வருமானத்தை திரட்டவும், ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் வழிவகை செய்கிற முற்போக்கான வரி விதிப்பு அவசியம்.
உலகின் வளர்ச்சியானது சமூகத்தில் பொருளாதார சமநிலையை ஏற்படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. உலக மக்கள்தொகையில் 10% நபர்களின் வருமானம் மீதமுள்ள 90% மக்களின் வருமானத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.