அதிகமாக தண்ணீர் குடிப்பதும் ஆபத்துதான்!

கோடையில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும், அதிக திரவங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

கோடை காலங்களில் தண்ணீர் அதிகம் குடிப்பது நல்லதுதான், ஆனால் அதிக தண்ணீர் குடிப்பதும் நீரிழப்பைப் போலவே ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள்.

மனித உடலானது, நீர், எலக்ட்ரோலைட்டுகளான சோடியம், பொட்டாசியம், குளோரைடு ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு சமநிலையைக் கொண்டுள்ளது.

வியர்வையின் அளவு அதிகரிக்கும்போது உடலானது நீரையும் அத்தியாவசிய தாதுக்களையும் இழக்கிறது. அப்போது தேவையான தண்ணீர் அருந்த வேண்டும்.

ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் தாதுக்கள் இல்லாத அதிக தண்ணீரைக் குடிப்பது செல்களுக்கு வெளியே இருக்கும் திரவத்தை நீர்த்துப்போகச் செய்கிறது. இதனால் ஹைபோநெட்ரீமியா ஏற்படுகிறது.

ஒரு மணி நேரத்திற்கு சுமார் 800 முதல் 1,000 மிலி (ஒரு லிட்டர்) திரவத்தை வெளியேற்றும் திறன் கொண்ட சிறுநீரகங்கள், அதிக சுமையால் திணறி அதிகப்படியான நீரை திசுக்களுக்குள் செலுத்துகின்றன.

அதிகப்படியான தண்ணீரை, குறிப்பிட்ட நேரத்திற்குள் அருந்துவது, ரத்தத்தில் சோடியத்தின் அளவைக் குறைத்து, ஹைப்போநெட்ரீமியாவுக்கு வழிவகுக்கிறது

தலைச்சுற்றல், சோர்வு, லேசான மயக்கம், லேசான குமட்டல் போன்ற ஆரம்ப அறிகுறிகள் - வலிப்பு, குழப்பம், சுயநினைவு இழப்பு வரை கொண்டு செல்லும்.

ஒருவரின் வயது, உடல் அளவு, செயல்பாடு, காலநிலை, உணவுமுறை, பொதுவான உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றைப் பொருத்து தண்ணீரின் தேவை மாறுபடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...