பொதுவாக காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். இது உடலுக்கு நீர்ச்சத்து வழங்குவதுடன் உடலில் கழிவுகளை வெளியேற்ற உதவும் என்று கூறப்படுகிறது.
அதேபோல சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மைதானா?
சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது, வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அதிக கலோரி உணவு உட்கொள்வதைக் குறைக்கலாம்.
ஆனால் தண்ணீர் குடிப்பது, வளர்சிதை மாற்றத்தின் மூலம் கொழுப்பை எரிக்காது. பசியைக் கட்டுப்படுத்த மட்டுமே உதவும்.
எனினும், சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் குடிப்பது வயிற்றில் அசௌகரியமான உப்புசத்தை ஏற்படுத்தக் கூடும்.
எனவே சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது பசியைக் கட்டுப்படுத்தி உணவு உட்கொள்வதை குறைக்குமே தவிர உடல் கொழுப்பைக் குறைக்காது என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதேபோல போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது வாய் வறட்சி, தலைவலி ஆகியவற்றை ஏற்படுத்தும். தாகத்திற்கேற்ப தண்ணீர் அருந்துவதுதான் சரியானது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.