நடிகை அனுபமா பரமேஸ்வரன் - நடிகர் துருவ் விக்ரம் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டா பதிவுகள் அவர்களுக்கு இடையே பிரேக் ஆப் ஆகியிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஏராளமான புகைப்படங்களைப் பகிர்ந்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பைசன் படத்தில் நடித்தபோது நடிகர் துருவ் விக்ரம் - அனுபமா இடையே நட்பு துளிர்க்கக் காரணமாக இருந்து, அது நாளடைவில் காதலாக மலர்ந்ததாகக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இதுபற்றி இருவருமே இதுவரை வாய் திறக்கவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை.
அந்த பதிவில் அவர் காதல் பற்றியோ, பிரிவு பற்றியோ எதையும் சொல்லவில்லை. (பிறகு எப்படிக் கண்டுபிடித்தார்கள்?)
அவரது இன்ஸ்டாவில் "அடடா!! இத்தனை புகைப்படங்களை ஒரே நேரத்தில் பகிர்ந்ததற்கு மன்னிக்கவும். ஒப்புதல்கள், பாடல்களைத் தேர்ந்தெடுப்பது அல்லது வேறொருவரின் குறிப்புக்காகக் காத்திருக்கத் தேவையில்லை என்றால், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக மாறுகிறது என்பதை இப்போதுதான் உணர்கிறேன்," என்ற வாசகத்துடன் அவர் தன்னுடைய பல புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.
இது போதாதா? அவரது ரசிகர்களுக்கு. இதுவரை அனுபமா தன்னுடைய புகைப்படங்களைப் பகிர யாரோ ஒருவருடைய அனுமதியைப் பெற்றுக் கொண்டிருந்தார். இப்போது அது தேவையில்லாமல் ஆகியிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?
துருவ் - அனுபமா பிரிந்ததற்கான ஒரு ரகசிய குறிப்பாக இருக்கலாம் என்றுதான் அவரது ரசிகர்கள் தீர்க்கமாக நம்புகிறார்கள். உண்மை என்னவென்று அவருக்குத்தான் தெரியும்.