தனுஷ் படத்தின் புதிய அப்டேட்

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

போர்த்தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய படம் ‘கர’. 90-களில் நடக்கும் வங்கிக்கொள்ளை கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயராம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

வேல்ஸ் நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 30 அன்று வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...