ஒருவா் ஐந்து நிமிஷங்களுக்கு மேல் காற்றைச் சுவாசிக்காமல் இருப்பின் உயிரிழப்பாா். ஆனால், நீரின்றி சில நாள்களும், உணவின்றி சில வாரங்களும் வாழ இயலும்.
தில்லி காற்று மாசைத் தடுக்க ஓய்வு பெற்ற நீதியரசா் மதன் பி. லோக்கூா் தலைமையில் 2020-ஆம் ஆண்டு, அக்டோபா் மாதம் கண்காணிப்புக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
பின்னா், 2021-ஆம் ஆண்டு ஏப்ரலில், அப்போதைய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் காற்று தர மேலாண்மை ஆணையத்தை அமைத்தாா்.
தில்லி மற்றும் தேசிய தலைநகா்ப் பகுதிகளில் காற்று மாசைக் கட்டுப்படுத்த இந்த ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.