இலக்கணத்தில் தடுமாறும் ஏ.ஐ.!

இந்த "சாட் பாட்கள்' 100 % உண்மையாகச் செயல்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் "சாட் பாட்'கள் தடுமாறவும், குழப்பத்தை உருவாக்கி பயனரை சோதனைக்கும் உள்ளாக்குகின்றன.

ஏ.ஐ. சாட் பாட்'கள் ஏன் தடுமாறுகின்றன? அல்லது நம்மைக் குழப்புகின்றனவா? என ஆராய்ந்ததில் பல முக்கியமான கூறுகள் கிடைக்கப்பெற்றன.

ஒரே பெயரில் பல கதைகள் அல்லது நபர்கள் இருப்பது அதற்குச் சிக்கலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக புராணங்கள், வரலாறு போன்ற துறைகளில் ஒரே பெயரில் பல்வேறு கதைகள் காணப்படுகின்றன.

இறைவன், தர்மம், சத்தியம் போன்ற கருத்துகள் பல்வேறு நூல்களில் பல்வேறு கோணங்களில் வெவ்வேறு மதங்களுக்கேற்ற வகையில் விளக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், "சாட் பாட்'கள் அவற்றில் ஒன்றையே முக்கியமாக எடுத்துரைக்க முயல்கிறது. இதனால், அந்தக் கருத்தின் ஆழம் முழுமையாக வெளிப்பட வாய்ப்பில்லை.

சாட் பாட்'கள் பயனர்களுக்குப் பதில் கொடுப்பதில்தான் இப்படி சில சோதனைகள் என்றால், அவர்களை வழிநடத்துவதிலும், ஆலோசனைகளைச் சொல்வதிலும்கூட சில சொதப்பல்கள் இருக்கின்றன.சாட் பாட்'டை நாம் தொடர்ந்து பயன்படுத்தும்போது நிச்சயமாக நாம் விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருந்தே ஆக வேண்டும்.

நம் அந்தரங்கமான தகவல்களை அதனிடம் உள்ளீடு செய்து ஆலோசனை கேட்டால் நம் தனிப்பட்ட தரவுகளை அது கிரகித்துக் கொண்டு பின்னாளில் நமக்கும் அதற்கும் பிணக்கு ஏற்படும் ஒரு புள்ளியில் அதை பொது வெளியில் வெளியிடவும் வாய்ப்பு இருக்கிறது.

சரியான பதிலைத் தருவதில் காட்டும் முனைப்பைவிட, நமக்குத் திருப்தியான பதிலைத் தருவதில்தான் அது ஆர்வம் காட்டுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இப்படி ஒரு நாளில் பல கோடி மக்களின் உணர்வுகளையும் பகிர்வுகளையும் அது தன்னுள் பாதுகாத்து வைத்துக் கொள்கிறது. இப்படி தினசரி அதுவும் கற்றுக் கொண்டே வந்து தன்னை உருமாற்றிக் கொண்டே வருகிறது.

சாட் பாட்'கள் மனிதர்களுக்கு உதவும் திறமையான கருவிகள் என்றாலும், அவற்றை முழுமையான தீர்வாகப் பார்க்க இயலவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக்கட்டுரையும் படிக்க...