கொள்கையில்லாத கூட்டணிகள்

தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அரசியல் கட்சிகளின் கூட்டணி பேரம் தொடங்கி விட்டது. நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசியல் கட்சிகளின் பேரம் நடைபெற்றது. ஊழல் கட்சிகள் என்று ஒதுக்கப்பட்டவை கூட்டணிக்குள் வந்துவிட்டால் பரிசுத்தமாகி விடுகின்றன.

மன்னர்களின் ஆதிக்கத்தை வெறுத்துதான் மக்களாட்சி உருவானது. அந்த மக்களாட்சியும் அமைச்சர்கள் ஆட்சியாகிவிட்டது. தேர்தல் காலத்தில் மட்டும்தான் இவர்களைத் தெருவில் பார்க்க முடியும். அதன்பிறகு பார்க்க விரும்பினாலும் இயலாது. காவல் படையும், கட்சிப் படையும் தடுத்து விடும்.

அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டுமானால் அதற்குச் சில வரைமுறைகள் தேவைப்படுகின்றன. அவை இல்லையெனில் நிராகரிக்கப்பட்டுவிடும். அதில் முக்கியமானது கட்சிகளுக்கான நோக்கமும், கொள்கையும்.

இப்போது கூட்டணி என்று வந்துவிட்டால் கொள்கையைப் பற்றியும், கோட்பாட்டைப் பற்றியும் யாரும் கவலைப்படுவதில்லை. ஒரே நோக்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.

மாநில ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுக தமது தேர்தல் அறிக்கையைக் கடந்த மார்ச் 29-ஆம் தேதி வெளியிட்டது. வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000-க்கு கூப்பன் வழங்கப்படும், விவசாயிகளுக்கு இலவச பம்ப் செட், மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்; புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை ரூ.1,500- ஆக உயர்த்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

மக்களுக்கு இலவசங்கள் வழங்கும் நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க...