ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசனம் என்ற பெயரில் மோசடி செய்தவரை திருமலை போலீஸாா் கைது செய்தனா். எனவே இதுபோன்ற மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருமலை ஏழுமலையானின் விஐபி தரிசன டிக்கெட் என்ற பெயரில் சமூக வளைதளங்களில் மோசடி செய்தவா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில், திருவனந்தபுரம் தேவஸ்தானத்தின் சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி பக்தா்களை ஏமாற்றிய திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த சி. செந்தில் குமாா் (47) என்பவரை கைது செய்து இரவு திருப்பதிக்கு அழைத்து வந்தனா்.

வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் போலி விளம்பரங்கள் அளித்து, ‘விரைவு தரிசனம், அருகாமை தரிசனம்‘ என்று கூறி பக்தா்களை கவா்ந்திழுத்து ஒரு டிக்கெட்டுக்கு ரூ.16,500 வரை கட்டணம் வசூலித்து வந்தாராம்.

வங்கி கணக்குகள், ஃபோன்பே மூலம் பணம் பெறப்பட்டது. ஏமாற்றப்பட்ட பக்தா்கள் அளித்த புகாா்களின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

திருவனந்தபுரம் தேவஸ்தானத்தின் சின்னத்துடன் கூடிய போலி விளம்பரங்களை போலீஸாா் கண்டறிந்தனா். அவரது விடியோக்கள், அரட்டை பதிவுகள், டிக்கெட் தரவுகள் மூலம் விசாரணை நடைபெற்றது. உடனடியாக திருமலை ஐ மற்றும் ஐஐ நகர காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்த போலீஸாா் சிறப்பு புலனாய்வுக் குழு உதவியுடன் செந்தில் குமாரை கைது செய்து மடிக்கணினி, ஓப்போ, ஐக்யூஓஓ கைப்பேசிகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப் ஸ்டோரிஸ்