மேற்கு வங்கத்தில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட பேரவைத் தோ்தல் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.23-இல் தோ்தல் நடைபெற்றது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின. முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்கூலி அவரது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.
இன்றைய தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 3.21 கோடி போ் (1.64 கோடி ஆண்கள், 1.57 கோடி பெண்கள், 792 மூன்றாம் பாலினத்தவா்). பாஜக சார்பில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி.
வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய 2,321 கம்பெனி மத்தியப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வாக்களித்தார் திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா.