எச்சரிக்கை மணி கேட்கிறதா?

கம்சனைப் பலி கொள்வது கண்ணனின் பிறப்பு நோக்கம் என்பது போல, கல்வி அமைச்சர் பிரதானின் கழுத்துக்குக் குறி வைத்துக் கொண்டு பிறந்தது கரப்பான் பூச்சி!

நீட் தேர்வு கூட நேரடியாக அவர்களின் குறியாக இல்லை! அதன் வினாத் தாள் கசிவு, அதில் ஊடுருவி நின்ற அதிகாரிகளின் ஊழல், அதனால் ஒரு மறு தேர்வு என்னும் மாணவர் அலைக்கழிப்பு, இவற்றை முன்னிறுத்தியே அந்தப் போராட்டம் நிகழ்ந்தது!

ஒவ்வொரு இளைஞனும் தானே பாதிக்கப்பட்டவன் என்பதால், அந்தப் போராட்டத்தில் ஓர் உயிரோட்டம் இருந்தது! லடாக்கைச் சேர்ந்த ஒருவரின் உண்ணாநோன்பு இவர்களின் போராட்டத்திற்கு வலிமை சேர்த்தது!

தேர் புறப்பட்டு விட்டது, அதுவாகச் சேர்க்கை சேர்ந்தது என்றாகி விடக் கூடாது என்று வடத்தில் கை வைக்க காங்கிரசின் ராகுலும், பொதுவுடைமைக் கட்சியினரும் முன் வந்தனர்! இடையில் யார் வருகிறார்கள் என்பது முக்கியமில்லை! வெள்ளைக் கொடி வீசித் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தவன் எவனோ, அவனே சேர்க்கை சேரும் வரை பொறுப்பாவான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க....