வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு! மகளிருக்கு ஜாக்பாட்!

மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் இன்று காலையிலேயே தமிழக அரசு சார்பில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!

DIN

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என ரூ.5 ஆயிரம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

அதாவது தமிழகத்தில் 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகை மற்றும் கோடைக்கால நிதியுதவு சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

DPS

இது குறித்துப் பேசியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிட மாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு மு.க. ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி என்றும் உறுதியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...