இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அந்நாட்டின் அதிபர் மாளிகைக்கு இன்று காலை சென்ற மோடிக்கு, குதிரைப்படை வீரர்களின் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தோனேசியாவின் உயரிய விருதான 'பிந்தாங் அதிபூர்ணா' (Bintang Adipurna) பிரதமர் மோடிக்கு வழங்கி அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கெளரவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு.