இந்தோனேசியாவின் பழமையான கோயிலில் பிரதமர் மோடி!

இந்தோனேசியாவில் பழமையான கோயிலுக்குச் சென்றார் பிரதமர் மோடி.

இந்தோனேசியாவில் பழமையான பிராமனன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு மேற்கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தோனேசியாவின் உயரிய விருதான 'பிந்தாங் அதிபூர்ணா' பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டது.

யோக்யகர்த்தாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமான பிராம்பனன் கோயிலுக்கு வருகை புரிந்தார்.

இந்தியாவின் உதவியுடன் இக்கோயில் வளாகத்தைப் பாதுகாத்துச் சீரமைக்கும் திட்டத்தைத் தொடங்குவதற்கான விருப்பக் கடிதத்தை நேற்று இருநாட்டவரும் பரிமாறிக்கொண்டனர்.

யோக்யகர்த்தாவில் பிராம்பனன் கோயில் சீரமைப்புத் திட்டத்தையும் தொடங்கி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிஸ்