வேளாண் கடன் தள்ளுபடி அவசியமே...

காவிரிப் படுகையில் நடத்திய கணக்கெடுப்பு, குறு விவசாயியின் கடன் ரூ.4.33 லட்சம், சிறு விவசாயியின் கடன் ரூ.3.63 லட்சம், நடுத்தர மற்றும் பெரிய விவசாயியின் கடன் ரூ.6.72 லட்சமாகவும் அதற்கு மேலாகவும் உள்ளது.

விவசாயக் குடும்பத்தின் சராசரி கடன் ரூ.1,06,546. இந்தக் குடும்பங்களின் ஆண்டு வருமானம் ரூ.1.25 லட்சம். அதாவது ஒட்டுமொத்த வருவாயும் கடனுக்கே செல்கிறது. இந்த நிலையை உணர்ந்ததால்தான், 1990 முதல் அவ்வப்போது அரசுகள் தற்காலிக நிவாரணமாக கடன் தள்ளுபடி செய்தன.

2006-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி அரசு எல்லா பிரிவு விவசாயிகளின் ரூ.7,000 கோடி கூட்டுறவு வேளாண் கடனைத் தள்ளுபடி செய்தது.

தற்போது முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு ரூ. 5,932 கோடி அளவில் இரு வகைகளில் கடன் தள்ளுபடி செய்துள்ளது. அனைத்து விவசாயிகளின் கடனும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடன் தள்ளுபடிகள் தொடர் நிகழ்வாக இல்லாமல் தவிர்க்க தமிழ்நாடு விவசாயிகள் வருவாய் உறுதி அளிப்பு திட்டத்தைத் தொடங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க...