சோதனைகளுக்கு நடுவில் சாதனை!

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும், பிரதமரான நரேந்திர மோடி ஒவ்வொரு இந்தியரிடத்திலும் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தையும் வரலாற்று ஆசிரியர்கள் புறக்கணிக்க முடியாது.

இந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் வியத்தகு மாற்றங்களுக்கு அவரது தலைமைதான் காரணம் என்பதை 12 ஆண்டுகளுக்கு முன்பு நாம் வாழ்ந்த இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும்.

2014 மே மாதம் 26-ஆம் தேதி பிரதமராகப் பதவி ஏற்றுக் கொண்டதில் இருந்து, இன்று வரையில் அதே சுறுசுறுப்பும், அதே உற்சாகமும், அதே போராட்ட குணமும், அதே தலைமைத்துவமுமாக பயணிக்கும் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.

ஜூன் 10 -ஆம் தேதி, தொடர்ந்து 4,399 நாள்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் இருந்த பெருமைக்குரியவராகி இருக்கிறார் நரேந்திர மோடி.

1952-இல் முதலாவது தேர்தல் நடந்தபோது, 53 கட்சிகள்தான் களத்தில் இருந்தன. இப்போது 2024-இல் பிரதமர் நரேந்திர மோடி எதிர்கொண்டது 2,593 அரசியல் கட்சிகளை.

நரேந்திர மோடி அரசின் சாதனையை, மனசாட்சி உள்ளவர்கள் மறுதலித்துவிட முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...