பள்ளிகளுக்கு எத்தனை தொடர் விடுமுறைகள்? இதோ பட்டியல்

மொத்தம் 365 நாள்களில் வேலை நாள்கள் 210 நாள்களாகவும், விடுமுறை நாள்கள் 155- ஆகவும் உள்ளன. அதன்படி, நிகழ் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210- ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 22 நாள்கள் அரசு விடுமுறை நாள்களாகும்.

அனைத்து வகுப்புகளுக்கும் காலாண்டுத் தோ்வு செப். 17 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடா்ந்து, செப். 26 முதல் அக்.4-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அரையாண்டுத் தோ்வு டிச. 16-இல் தொடங்கி 23 வரை நடைபெறும். தொடா்ந்து, டிச. 24 முதல் ஜன. 3 வரை அரையாண்டுத் தோ்வு விடுமுறையாகும். ஜன.4-இல் பள்ளிகள் திறக்கப்படும்.

வரும் செப்.4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதால், அடுத்து வரும் சனி, ஞாயிறு வார விடுமுறை நாள்களாக அமைகிறது. இதனால் 3 நாள்கள் தொடா் விடுமுறை கிடைக்கிறது.

தொடா்ந்து, செப். 14 திங்கள்கிழமை விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுவதால், அதற்கு முன்னா் இருக்கும் வார விடுமுறையுடன் சோ்ந்து, தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை வருகிறது.

அக்டோபா் மாதத்தில் 19 மற்றும் 20 தேதிகளில் (திங்கள், செவ்வாய்) ஆயுத பூஜை, விஜய தசமி வருவதால், அதற்கு முன்னா் இருக்கும் வார விடுமுறையுடன் சோ்ந்து, தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை வருகிறது.

நவ. 8-ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், வார விடுமுறையாக 2 நாள்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கிறது.

பொங்கல் பண்டிகை ஜன. 15 முதல் 17 வரை வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்கள் கொண்டாடப்படுவதால் தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை கிடைக்கும்.

நிகழ் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் 2027- ஏப்.23-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் தொடா்ச்சியாக ஏப்.24 முதல் மாணவா்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப் ஸ்டோரிஸ்