கீர் பவானி - வருடாந்திர மேளா!

ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ரக்னியா தேவி கோயிலில் வருடாந்திர கீர் பவானி திருவிழா நடைபெறுகிறது.

ஸ்ரீ நகரில் இருந்து வடகிழக்கில் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

மத்திய காஷ்மீரின், பிரம்மாண்டமான சினார் மரங்களின் நிழலில் அமைந்துள்ளது.

'ஜ்யேஷ்ட அஷ்டமி' திருவிழாவைக் கொண்டாட நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் வருகிறார்கள்.

விழாக்கோலம் பூண்ட கந்தர்பால் மாவட்டம்.

கீர் என்ற சொல் பால் மற்றும் அரிசி கொழுக்கட்டையைக் குறிக்கிறது.

இங்குள்ள தெய்வத்தைச் சாந்தப்படுத்துவதற்காகப் பால் கொழுக்கட்டை நிவேதனமாக வழங்கப்படுகிறது.

கீர் பவானி கோயிலில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

கீர் பவானியை 'பால் தெய்வம்' என்றும் அழைப்பதுண்டு.

கீர் பவானியை வணங்கும பக்தர்கள்.

விளக்கேற்றி வழிபடும் பெண் பக்தர்.

காஷ்மீர் ஹிந்துக்கள் கீர் பவானியை தங்கள் குலதேவியாக வணங்குகிறார்கள்.

கோயில் வளாகத்தைச் சுற்றியும், சன்னதிக்குச் செல்லும் பாதை நெடுகிலும் பல அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு காஷ்மீரியும் இந்த திருவிழாவிற்காக ஒரு வருடம் காத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிஸ்