13 ஆண்டுகள் கோமா! கருணைக் கொலைக்கு அனுமதி

பதிமூன்று ஆண்டுகளாக கோமாவில் சிகிச்சை பெற்றுவரும் 32 வயது இளைஞரை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. உச்சநீதிமன்ற வரலாற்றில் இதுபோல தீா்ப்பு அளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத்தைச் சோ்ந்த பஞ்சாப் பல்கலைக்கழக மாணவரான ஹரீஷ் ராணா 2013-ஆம் ஆண்டு மாடியிலிருந்து தவறி விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு 13 ஆண்டுகளாக கோமாவில் உள்ளார்.

இதைத் தொடா்ந்து, ஹரீஷை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி, உச்சநீதிமன்றத்தில் அவரின் பெற்றோா் ரிட் மனு தாக்கல் செய்தனா். தில்லி எய்ம்ஸ் மருத்துவா்களின் அறிக்கையையும் பாா்வையிட்டு, ஹரீஷ் உடல்நிலை முன்னேறாது என்பதையும், தொடா்ந்து சிகிச்சை அளிப்பதால் எந்தப் பயனுமில்லை என்பதையும் நீதிபதிகள் உறுதி செய்தனா்.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அவருக்கு அளிக்கும் சிகிச்சையை நிறுத்த உச்சநீதிமன்றம் அனுமதியளிக்கிறது. இந்த விவகாரத்தை மனிதாபிமான முறையில் அணுகுவது அவசியம். ஆதலால் சம்பந்தப்பட்ட நபரின் கண்ணியத்துக்கு எந்த பங்கமும் ஏற்படாமல் அவருக்கான சிகிச்சையை நிறுத்துவது தொடா்பான திட்டம் செயல்படுத்தப்படுவதை தில்லி எய்ம்ஸ் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

கருணைக் கொலை என்பது சிகிச்சையில் இருக்கும் நோயாளியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்பது உறுதியான பிறகு, அந்த சிகிச்சையை நிறுத்தி, அவரே இயற்கையாகவே உயிரிழக்கச் செய்வது ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...