எல்லை தாண்டிய எரிவாயு தட்டுப்பாடு!

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன.

குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை வழியாகவும், வளைகுடா நாடுகளில் இருந்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் எல்பிஜி சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் பெரும்பாலான நாடுகளில், எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது. குறைந்த அளவே கச்சா எண்ணெய் இருப்பு வைத்திருந்த நாடுகளில் அதன் தாக்கம் உடனடியாக எதிரொலிக்க தொடங்கியது.

மக்கள்தொகை அதிகம் கொண்ட இந்தியாவிலும், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தில் நாட்டு மக்கள் பலரும் தண்ணீர் கேன்கள், டிரம்களின் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கிச் செல்வதால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் சூழல் நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையிலும் பலரும் தீர்ந்துவிடும் என்ற அச்சத்தில் பெட்ரோல், டீசலை வாங்கிச் சென்றதால், பல பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன.

படங்கள்: பிடிஐ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...