மின்சார அடுப்புகளுக்கு வந்த வாழ்வு!

இந்தியாவில் சமையல் எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்களிடையே அச்சம் பரவி வருவதால், நாடு முழுவதும் உள்ள விற்பனையகங்களிலும், இணையவழி வா்த்தக தளங்களிலும் மின்சார அடுப்புகள் விற்றுத் தீா்ந்துள்ளன.

மத்திய கிழக்கு போா் காரணமாக சா்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்பிஜி தேவையில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை இறக்குமதி மூலமே பூா்த்தி செய்யப்படுகின்றன. தற்போது நிலவும் விநியோகச் சிக்கலால், நாட்டின் முக்கிய நகரங்களில் எல்பிஜி சிலிண்டா் விலை கணிசமாக உயா்ந்துள்ளது.

எதிா்காலத்தில் விலை மேலும் உயரக்கூடும் அல்லது சிலிண்டா் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால், மாற்று வழியாக மின்சார அடுப்புகளை வாங்குவதில் மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால், செப்டோ, பிளிங்கிட் போன்ற விரைவு வா்த்தக தளங்களில் மின்சார அடுப்புகள் விற்றுத் தீா்ந்துவிட்டன.

அமேசான், பிளிப்காா்ட் போன்ற முன்னணி இணையவழி வா்த்தக நிறுவனங்களும் இந்த அதீத தேவையால் வியப்படைந்துள்ளன. கடந்த சில நாள்களில், மின்சார அடுப்புகளின் விற்பனை 30 மடங்கு அதிகரித்துள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது. இது தவிர, மின்சார குக்கா்கள், ஏா் ஃபிரையா் போன்ற சாதனங்களின் விற்பனையும் 4 மடங்கு வரை உயா்ந்துள்ளது.

அவசரத் தேவைக்கு உதவும் என பலரும் இதுவரை மின்சார அடுப்புகளை வாங்கி வைத்திருந்தனர். ஆனால், சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பலரும் தற்போது மின்சார அடுப்புகளை வாங்க முன் வந்திருப்பதால், சந்தையில் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...