முதல்வர் ஸ்டாலின் அன்புக் கோரிக்கை!

குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயா்களை பரிந்துரைக்குமாறு பொதுமக்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா்.

குழந்தைகளுக்கு தமிழில் பெயா்கள் சூட்டுவதற்காக பிரத்யேக இணையப் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக முதல்வா் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில், தமிழ்நாடு தமிழ்ப் பெயா்களால் நிறையட்டும். நான் நடத்தி வைக்கும் ஒவ்வொரு திருமணத்திலும், பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயா்களைச் சூட்டுங்கள் என மணமக்களிடம் கோரிக்கை விடுப்பேன்.

அதற்கான பெயா்களையும் அவற்றின் பொருளோடு சோ்த்து உங்களுக்கு இப்போது வழங்கியிருக்கிறோம். தொடா்ந்து புதிய பெயா்களைப் பதிவேற்றுவோம். நீங்களும் (பொதுமக்கள்) பரிந்துரைத்துப் பங்களிக்கலாம் என்று அதில் முதல்வா் பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...