பலர் தனக்குக் கிடைத்திருக்கிற அதிகார பலத்தைக் கொண்டு ஒரு நாட்டையே தன் சர்வாதிகாரத்தின் பிடியில் அழுத்தித்தன் காலால் மற்றநாட்டு மக்களை அழிக்க நினைக்கிறார்.
நவீனகாலத்தில் உழவுத் தொழிலை தாழ்ந்த தொழிலாக நினைத்து வெறுக்கத் தொடங்கினோம். பணம் பெருக்கும் தொழில்களையே பெரிதென்று நம்புகிறோம்.
உயிர்களை வாழவைக்கும் உழவுத் தொழிலுக்கு மாற்றாக உயிர்களையெல்லாம் கொடூரமாகக் கொல்லக்கூடிய அத்தனை ஆயுதங்களையும் உருவாக்கும் அழிவுத் தொழிலைச் செய்து கொண்டிருக்கின்றன.
பேசித் தீர்ப்பதன் மூலம் பேதங்களை அகற்றலாம் என்பதுதான் இலக்கியங்கள் காட்டும் செந்நெறி.
நாம் அறவாழ்வாம் அகவாழ்வையும் மறந்து விட்டோம். பிற உயிர்களுக்காக வாழும் தவ வாழ்வையும் மறந்து விட்டோம். அற்பக் காகிதக் காசுக்காக எதையும் அடமானம் வைக்கத் துணிகிற மடமை பூண்டு விட்டோம்.
நாடு காக்கும் வேந்தர்கள் போர்நிலை பெருக்குவதைக் காட்டிலும் நீர்நிலை பெருக்கினால் உலகம் உய்யும் என்கிறார் குடபுலவியனார்.