'வர வர யாரை நம்புவது என்றே தெரியவில்லை. எந்த நேரத்தில் யார் என்னவாக ஆவார்கள் என்றே புரியவில்லை' என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லி அலுத்துக் கொண்டார் நடைப்பயண நண்பர். எந்த நோக்கத்தில் யாரை மனதில் வைத்துக்கொண்டு அவர் சொன்னார் என்பது தெரியாது. அது அவருக்குள் இருக்கிற ஆதங்கம்; அது மட்டுமல்ல; அது அவரது அந்தரங்கமும்கூட.
ஒருவர் செய்யும் செயலானது சந்தர்ப்ப சூழலால் நன்றாகவோ, தீயதாகவோ ஆகி விடுகிறது. மற்றபடி யார் ஒருவரும் தீமை செய்வதையே தொழிலாகக் கொண்டு ஒழுகுபவராக இருந்துவிட முடியாது. அறிந்தோ, அறியாமலோ செய்யப்பட்ட தீமையை வைத்து அவரைத் தீயவர் என்று அடையாளப்படுத்தி விடுவது, அவரை எப்போதும் அந்தக் கண்ணோட்டத்திலே நிறுத்திவிடுவதாக ஆகிவிடுகிறது. அந்த முத்திரையை அவருக்கு இட்ட தீமையைப் புரிந்தவராகநாமும் ஆகிவிடுவோம்.
முதற்படி, பிறர்தீமையைச் சொல் பவர்களிடம் கேளாமல் இருப்பது. கேட்டா லும் மனக் கொள்ளாமல் இருப்பது. அது அகத்துக்கும் புறத்துக்கும் நல்லது. நம்மை நாமே கெடுத்துக்கொள்ள இடம் கொடுக்க வேண்டாமே. இது மாதிரி அவரேஅவர் யாரே ஆயினும் உங்களைப் பற்றி என்னிடம் சொன்னாலும் என்நிலை இதுதான். இத்தனை சொல்லியும் ஏற்றுக் கொள் ளாத தயக்கத்துடன் அவர் கேட்டார். அப் படியானால் அவர் செய்த தீமையை அப்படியே விட்டுவிடுவதா?
அப்படி என்ன தீமை செய்துவிட்டி ருப்பார். கொலையே செய்துவிட்டாரா? கொலைக்கு நிகரான கொடுஞ்செயலையே அவர் செய்திருந்தாலும், அவர் எப்போ தாவது ஏதாவது ஒரு நல்லது செய்திருக்க மாட்டாரா? அதனை நினைத்துக் கொள் ளுங்கள், தீயது மறந்துபோகும்' என்று அதற் கும் திருவள்ளுவர் வழிகாட்டுகிறார்.கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும் (திருக்குறள்-109)புன்னகையோடு, நண்பரும் அமைதியாக ஏற்றுக்கொண்டார்.'இன்று ஒன்று நன்று என்று கொள்ளத் தக்க இந்தச் செய்தியால், தீமையைப் பரப் பும் செயலில் இருந்து ஒருவரை மடைமாற் றம் செய்ய முடிந்தது. இது எல்லாருக்குமா னதாகட்டும்.என்பதேவிழைவு.