நீட்.. ஆடைக்கட்டுப்பாட்டில் புதிய மாற்றம்!

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

பொதுவாகவே நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளின்போது மாணவர்களிடம் காட்டப்படும் கெடுபிடிகள் பேசுபொருளாகி வரும் நிலையில், மாணவர்களும் பெற்றோர்களும் ஓரளவுக்கு அதற்கேற்ப மாறி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு வரை அரைக்கை சட்டை மட்டுமே அணிய அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த ஆண்டு முதல் முழுக்கை வைத்த சட்டைகள் அணியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்களை மூடிய காலணிகளை அணிந்து வந்தால் அவற்றை தேர்வுக்கூடத்துக்கு வெளியே விட்டுவிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நுழைவுத் தேர்வ பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றாலும்கூட, மாணவர்கள் பமுற்பகல் 11 மணி முதல் நுழைவுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 1.30 மணிக்கு மேல் வரும் யாரும் தேர்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

முக தோற்றத்தையே மாற்றும் அல்லது நுழைவுக் கூட அனுமதிச் சீட்டில் இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர்தானா என்பதையே சந்தேகிக்கும் வகையிலான முடி திருத்தம் அல்லது முடி அலங்காரம் செய்வதை மாணவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப் ஸ்டோரிஸ்