டெங்கு பரவலைத் தடுப்போம்

மாநில அளவிலான டெங்கு பாதிப்பில் தலைநகர் சென்னை தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. சென்னையில் மட்டும் செப்டம்பர் 17 அன்று டெங்கு காய்ச்சலால் 87 பேரும், மலேரியா, சிக்குன்குனியா, ஃபுளூ காய்ச்சல் போன்ற நோய்களால் 156 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பருவமழை காய்ச்சலின் பரவல் தொடர்ந்து அதிகமாக காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

டெங்கு வைரஸ் பாதித்த ஒருவரை ஏடிஸ் கொசு கடிக்கும்போது, கொசுவின் உடலுக்குள் வைரஸ் செல்கிறது. பின்னர், அந்தக் கொசு மற்றொரு நபரை கடிக்கும்போது, வைரஸ் அவருடைய ரத்தத்தில் கலந்து டெங்கு தொற்று ஏற்படுகிறது. இந்தக் கொசுக்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் கடிக்கும்.

வீடுகளைச் சுற்றி தேங்கும் சுத்தமான நீர், பூந்தொட்டி, பழைய டயர், தேங்காய் ஓடு, தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றில் ஏடிஸ் கொசுக்கள் ஏராளமாக இனப்பெருக்கம் செய்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க.....