முடி கருமையாக நீண்டு வளர..

முடி கருமையாக வளர வீட்டிலேயே செய்யும் குறிப்புகள்

ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்திப் பூவை அரைத்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி வடிகட்டிய பிறகு தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

ENS

கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் -4 இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் கூந்தல் கருமையான நிறத்துடன் வளரும்.

கடுக்காய், செம்பருத்திப் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து அரைத்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

ENS

வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் பேக் போல் தடவி நன்கு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.

மருதாணி இலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெய்யில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஊற விட்டு அதை நன்கு காய்ச்சி தலைக்கு தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்.

மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணெய்யில் கலந்து ஊற விட்டு பின்பு தலைக்குத் தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.

ENS

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...