உத்தரக்கண்ட் மாநிலத்தில் இமயமலை தொடரில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் 12 ஜோதிர்லிங்களில் 11வது ஆகும். சார்தாம் யாத்திரையின் முக்கிய தலமாகவும் விளங்குகிறது.
இந்தக் கோயில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மந்தாகினி ஆற்றில் கரையில் 3,583 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாதங்கள் மட்டுமே கோயில் திறந்திருக்கும். பக்தர்கள் சென்று தரிசிக்கலாம்.
பனி மழை பொழியும் என்பதால், ஏப்ரல் மாதத்தில்தான் கோயில் நடை திறக்கப்படும். இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி கோயில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பனிமழைக்கு இடையே காட்சியளிக்கும் கேதார்நாத் கோயில். சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு நவ.11ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.