அமர்நாத் யாத்திரை தொடங்கும் தேதியை ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார்.
இமயமலையில் சிவபெருமானின் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது.
குகைக்கோயிலில் இயற்கையாகத் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
ஜூன் 3-ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை தொடங்குகிறது.
ஜூன் 3 முதல் ஆகஸ்ட் 28 வரை மொத்தம் 57 நாள்கள் இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை நடைபெறும்.
ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அமர்நாத் யாத்திரைக்கு முன்பதிவு செய்யலாம்.
ஆன்லைன் மூலமாக பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
13 முதல் 70 வரையிலான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர்.