கருணாம்பிகையம்மன் உடனுரை அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா செவ்வாய்க்கிழமை(ஏப். 21) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்து எழச்செய்த திருத்தலம்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு தேர்த் திருவிழா வேத பாராயணம், பஞ்ச வாத்தியம் முழங்க கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக தொடங்கியது.
கொடியேற்றத்தை ஒட்டி விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், கருணாம்பிகையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப். 28-ஆம் தேதி காலை அவிநாசியப்பர் திருத்தேர் வடம் பிடித்தல் தேரோட்டம், வடக்கு ரத வீதியில் தேர் நிறுத்தப்படும்.