சாவன் மாத திங்கள்!

வடமாநிலங்களில் ஆடி மாதத்தை சாவன் மாதம் என்றழைக்கப்படுகிறது.

வட இந்திய 'பூர்ணிமாந்த' (Purnimanta) நாள்காட்டியின்படி, சாவன் மாதம் ஜூலை 30 வியாழக்கிழமை தொடங்கி, ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமையன்று நிறைவடைகிறது.

2026-ஆம் ஆண்டின் சாவன் மாதத்தின் முதல் திங்கள்கிழமை ஆகஸ்ட் 3 (இன்று) வருவதால், சிவபெருமானை வணங்குவோர் மங்களகரமான 'சாவன் சோமவார்' விரத காலத்தை இன்று முதல் தொடங்குகின்றனர்

தமிழ்நாட்டில் கார்த்திகை சோமவாரம் போன்று வடமாநிலத்தில் சாவன் சோமவாரம் சிவபெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படுகின்றது.

வட மாநிலத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கம்.

ஜோதிர்லிங்களில் ஒன்றாகக் கருதப்படும் காசி விஸ்வநாதர் கோயிலில் சிராவண மாதத்தின் முதல் திங்கள்கிழமையில் ஜலபிஷேகம் முக்கியமானது.

கங்கையிலிருந்து புனித நீரெடுத்து, தங்களது ஊரில் உள்ள சிவன் கோயிலில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள் பக்தர்கள்.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று சிறப்பாக ஜலபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..