பிப். 13 விஷ்ணுபதி புண்ணிய காலம்!

பிப்ரவரி 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 1.30 மணியிலிருந்து காலை 10.30 மணி வரை உள்ள நேரம் விஷ்ணுபதி புண்ணியகாலம்.

முடிந்தவர்கள், வாய்ப்புள்ளவர்கள், விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் பெருமாள் கோயிலுக்குச் சென்று காலை 10.30 மணிக்குள் வழிபாட்டை முடிக்க வேண்டும்.

அவ்வாறு கோயிலுக்குச் செல்வோர், வெளியிலிருந்து பெருமாளை வணங்கிவிட்டு, பெருமாளின் கருவறையை, கொடிமரத்தோடு சேர்த்து 27 முறை வலம் வர வேண்டும்.

27 முறையை தவறாமல் எண்ணுவதற்காக, கையில் 27 மலர்களைக் கொண்டு சென்றால், ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் கொடிமரத்தின் பாதத்தில் ஒவ்வொருப் பூக்களாக வைத்து 27 சுற்றையும் நிறைவு செய்யலாம்.

27 முறையும் கோயிலை வலம்வரும்போது, ஓம் நமோ நாராயணா என்றும் நாராயணா நாராயணா என்றும் மந்திரத்தைக் கூறியபடி வலம் வருதல் நலம் பயக்கும்.

27 சுற்றுகள் முடித்து, பெருமாளை தரிசிக்கச் செல்லும்போது துளசி மாலை சார்த்தியும், அர்ச்சனை செய்தும் வழிபடலாம்.

விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் பெருமாளிடம் வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதும், பொருளாதார உயர்வு, செல்வ செழிப்பு, வளமான வாழ்வு கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...