ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல முருகனுக்கும் உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம், தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கும் ஆடி மாதம் விசேஷமாகக் கருதப்படுகிறது.
முருகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தைப்பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம், கந்தசஷ்டி விரதம் ஆகியவை முக்கியமான நாள்களாகக் கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் ஆடிக் கிருத்திகை மேலும் சிறப்பானது.
கார்த்திகை என்பது முருகனின் பெயர்களுள் ஒன்றான கார்த்திகேயன் என்ற பெயரைக் குறிக்கும். அதுவே காலப்போக்கில் கிருத்திகை என்று மாறியுள்ளது.
அனைத்து முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், வீதியுலா நடைபெறும்.
அப்பேர்பட்ட விசேஷமான ஆடிக் கிருத்திகை 2026-ல் எப்போது வருகின்றது என்று தெரிந்துகொள்வோம்.
ஆடிக்கிருத்திகை இந்த வருடம் இரண்டு நாள்கள் ஒன்றுப்பட்டு வருவதால் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு 6.19-க்கு தொடங்கி ஆகஸ்ட் 7 மாலை 5.52-க்கு நிறைவடைகிறது. விரதம் மேற்கொள்பவர்கள் இந்த நேரத்தைக் கடைப்பிடிக்கலாம்.