சந்திர கிரகணம்! திருப்பதி தேவஸ்தான கோயில்கள் மூடல்

சந்திர கிரகணம் காரணமாக மாா்ச் 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் மூடப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம் இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிவடைய உள்ளது. வைகானச ஆகம விதிப்படி கிரகணத்துக்கு 6 மணி நேரத்திற்கு முன்பு கோயில் நடை மூடப்படுவது வழக்கம்.

அதன்படி இன்று காலை முதல் இரவு வரை 10 மணி நேரம் மூடப்பட்டு உள்ளது. கிரகணம் முடிந்து சுத்தி, புண்யாவசனம் செய்வதற்காக இரவு 7.30 மணிக்கு கோயில் கதவுகள் திறக்கப்பட்டு சுத்தி மற்றும் புண்யாஹவசனங்கள் செய்யப்படும். அதன் பிறகு, பக்தா்கள் இரவு 8.30 மணி முதல் ஏழுமலையான் தரிசனதிற்கு அனுமதிக்கபடுவா்.

சந்திர கிரகணத்தையொட்டி செவ்வாய்க்கிழமை அஷ்டதள பாத பத்மாராதன சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் விஐபி பிரேக் தரிசனங்கள், ஸ்ரீவாணி தரிசனங்கள், ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசனம், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோா்கள், முதியோா், உள்ளூா்வாசிகள், நன்கொடையாளா்கள் மற்றும் என்ஆா்ஐ தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பக்தா்கள் கவனத்துக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு சில நாள்களுக்கு முன்பே இது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...