காரடையான் நோன்பு மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படவிருக்கிறது.
மாசியும், பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவதே காரடையான் நோன்பு. அந்த வகையில் இந்த ஆண்டு சனிக்கிழமை அன்று வருகிறது.
குடும்பம் மற்றும் கணவரின் நன்மைக்காக வேண்டி பெண்கள் நோற்கும் நோன்பு இது.
பார்வதி தேவி சிவலிங்க பூஜை செய்து, மீண்டும் சிவனுடன் சேரக் காரணமாக இருந்தது இந்த காரடையான் நோன்பு.
ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால், இந்த நோன்புக்கு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் வந்தது.
இந்த நோன்பிருந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
மாசி மாத கடைசி நாள் இரவில் ஆரம்பித்து, பங்குனி மாத முதல் நாள் காலையில் விரதம் நிறைவு செய்வார்கள். இதனை சாவித்ரி விரதம் என்றும் அழைக்கிறார்கள்.