இன்று தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் தடையின்றி நடக்கும். நீங்கள் எடுத்த முயற்சிகள் நல்லபடி முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வந்துநீங்கும். உத்தியோகத்தில் வளர்ச்சி இருக்கும். தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இளம் சிவப்புஅதிர்ஷ்ட எண்: 1, 9
இன்று எதிர்பார்த்தபடி சரக்குகள் விற்பனையாகும். போட்டி விற்பனையாளர்கள் விலகிச்செல்வார்கள். குழந்தைகளின் உயர்கல்விக்கான கடன் தடையின்றிக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அரசுப்பணியில் உள்ளவர்கள் எதிலும் நிதானமாகச் செயல்படவேண்டும். வேலைதேடும் இளைஞர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் நீலம்அதிர்ஷ்ட எண்: 2, 6
இன்று நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் நன்மை ஏற்படாது. எதிர்பார்த்த முடியுமென்று நினைத்த ஒரு காரியம் திடீரென நல்ல முடிவுக்கு வரும். அந்த முக்கியமான காரியம் சாதகமாகவே இருக்கும். உடன்பிறந்தவர்களிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மாறும்.அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 3, 5
இன்று தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் நினைத்தபடி மாற்றங்களைச் செய்யலாம். வியாபாரிகள் போட்டி விற்பனையாளர்களை சமாளிக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். குழந்தைகள் உயர்கல்வியில் விரும்பிய பாடங்களைப் பெறுவார்கள்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்: 2, 3
இன்று பிடிவாதத்தை விடுவது நன்மை தரும். எல்லா நன்மைகளும் உண்டாகும். அறிவுத் திறன் கூடும். வீண் அலைச்சல் திடீர் டென்ஷன் ஏற்படலாம். காரியங்களில் இழுபறியான நிலை ஏற்பட்டுபின்னர் முடியும். உடல் பலவீனம் உண்டாகலாம். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
இன்று சொத்து சார்ந்த வழக்குகள் வெற்றி தரும். தூரதேசத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களால் போற்றப்படுவார்கள். கடனும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும் லாபத்தையும் பெறுவார்கள். வியாபாரிகள் கொள்முதல் சரக்குகள் அனைத்தையும் விற்பனை செய்துவிடுவார்கள்.அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்அதிர்ஷ்ட எண்: 4, 5
இன்று வரவேண்டிய பழைய பாக்கிகள் நீங்கள் கேட்காமலேயே வந்துசேரும். அரசு ஊழியர்கள் நினைத்தபடி மாறுதலை அடைவார்கள். மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவார்கள். இதுவரை சகோதரர்கள் மத்தியில் இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மீண்டும் வேலையில் சேர்வார்கள்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்: 6, 9
இன்று மனைவி வழியில் அனுகூலங்கள் வந்துசேரும். சுபகாரியப் பேச்சுகள் நல்லபடியாக முடியும். அரசியல் பிரமுகர்கள் திட்டமிட்டபடி புதிய பதவிகளைப் பெறுவார்கள். நல்ல வாய்ப்புகளும் வந்துசேரும். பெற்றோர்கள் வழியில் இருந்த பகை நீங்கும். வழக்குகள் சாதகமாகும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பழுப்பு, அடர் நீலம்அதிர்ஷ்ட நிறம்: 3, 9
இன்று உங்கள் முயற்சிக்கேற்ற வரவைப் பெறுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். ஒருசிலருக்கு பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். வழக்குகளில் வெற்றியும் கிட்டும். உங்களைப் பிரிந்துசென்ற சொந்தம் திடீரென தேடிவந்து சேரும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்: 1, 3, 9
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். மறைந்த பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். அரசு ஊழியர்கள் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மேலதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடலாம். தொழிலதிபர்கள் நினைத்தபடி புதிய ஒப்பந்தம் போடுவார்கள். அது எதிர்பார்த்தபடி லாபமும் தரும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்: 2, 5, 9
இன்று வியாபாரிகள் புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். கடிதத் தொடர்புகளில் நல்ல தகவல்கள் வந்துசேரும். புதிய முயற்சிகளை தாமதித்து செய்யவேண்டும். எதிலும் நிதானமாகச் செயல்பட்டால் காரியத்தில் வெற்றிகாணலாம். அவசரம் காட்டினால் நஷ்டத்தைக் கொண்டு வரும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சிவப்புஅதிர்ஷ்ட எண்: 1, 4, 7
இன்று உறவினர்கள், மற்றவர்கள் அனைவரும் ஆதரவாக இருப்பார்கள். உடல்நிலையில் மிகவும் கவனம் செலுத்தவேண்டும். கட்டுப்பாடான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் மருத்துவச் செலவைக் குறைக்கலாம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் வந்துநீங்கும். தொழிலதிபர்கள் சந்தையில் அதிக போட்டியை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்: 1, 3, 9