இந்த வாரம் உங்க ராசிக்கு எப்படி?

குடும்ப வருமானத்தை மேம்படுத்திக்கொள்வீர்கள். நீண்டநாள் பிரார்த்தனை ஒன்று நிறைவேறும்.உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கௌரவம் உயரக்காண்பீர்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு பெருகும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள்.பெண்கள் ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் கடுமையாக உழைத்துப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

தொழிலில் சில மாற்றங்களைக் காண்பீர்கள். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் மேன்மையைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் நண்பர்கள் போல் பழகுபவர்களின் சுயரூபம் புரிந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் புதுமையான விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். பெண்கள் ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.சந்திராஷ்டமம் - மார்ச் 13.

வருமானம் சிறப்பாக இருக்கும். உடல் உபாதைகள் நீங்கும். போட்டிகளில் வெற்றி காண்பீர்கள்.உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் அலுவலகத்தில் சுழன்று வேலை செய்வீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். பெண்களுக்கு சேமிப்பு தொடர்பான புதிய சிந்தனைகள் உண்டாகும். மாணவர்கள் ஆசிரியர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி முடித்துவிடுவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட மாட்டீர்கள். அரசியல்வாதிகள் கட்சிமேலிடத்திடம் பொறுமையாக நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் துறையில் நிபுணர்களைச் சந்திப்பீர்கள். பெண்கள் பொருளாதாரத்தில் மேன்மையைக் காண்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.சந்திராஷ்டமம் - மார்ச்17, 18.

வருமானம் உயரக்காண்பீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு திடீர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள்.பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் சாதகமாகும்.சந்திராஷ்டமம் - மார்ச் 19.

எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகள் கட்சி பிரசாரங்களில் அனுபவ அறிவைப் பயன்படுத்துவீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகளுக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். மாணவர்களுக்கு நண்பர்களால் உதவி கிடைக்கும்.சந்திராஷ்டமம் - இல்லை.

வருமானம் சீராக இருக்கும். தொழிலை விரிவுபடுத்த பயணங்களைச் செய்வீர்கள்.உத்தியோகஸ்தர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மேலிடத்திடம் இருக்கும் உறவை சீர்படுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் இணக்கமான நட்பு தொடரும். பெண்கள் குடும்ப ஒற்றுமையைப் பேணிக்காப்பீர்கள். மாணவர்கள் கணிசமான மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

உங்கள் காரியங்களில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மனதில் புதிய தெளிவுடன் காணப்படுவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழலை சாதகமாக மாற்றிக்கொள்வீர்கள். அரசியல்வாதிகள் கட்சியில் நற்பெயரெடுப்பீர்கள். கலைத்துறையினர் புதிய நுட்பங்களைக் கற்றுத்தேர்வீர்கள். பெண்கள் ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

பொருளாதாரம் ஏற்றமாக இருக்கும். பழைய கடன்களைத் திருப்பி அடைக்கத் தொடங்குவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் சீரிய கவனம் செலுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் திரும்பக் கிடைக்கும்.பெண்களுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். மாணவர்கள் பெற்றோரின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளைப் புரிந்துகொள்வீர்கள். புதிய இலக்குகளை எட்டுவீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் போனஸ் கிடைக்கும். வியாபாரிகள் சிறிது செலவு செய்து கடையை அலங்கரிப்பீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் வருமானத்தைப் பெறுவீர்கள்.அரசியல்வாதிகளுக்குக் கட்சிமேலிடம் தேவையான ஆதரவைத் தரும். கலைத்துறையினருக்கு துறையில் செல்வாக்கு அதிகரிக்கும். பெண்களுக்குக் குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றிபெறுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். பழைய பிரச்னைகளில் தீர்வு உண்டாகும்.உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினர் பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள். பெண்கள் கணவர் குடும்பத்தாரிடம் இணக்கமாக நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் சோம்பேறித்தனத்தை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு கவனமாகப் படிப்பில் ஈடுபடுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

எடுத்த காரியங்களை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும்.உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.அரசியல்வாதிகள் புதிய நண்பர்களால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பீர்கள். பெண்கள் ஆன்மிகத்திலும் தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

முகப்பு பக்கத்துக்கு...