மதுரை சித்திரைத் திருவிழா!

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம், கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய மதுரை சித்திரைத் திருவிழா வருகிற ஏப். 18-ஆம் தேதி தொடங்கி மே 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வருகிற ஏப். 18-ஆம் தேதி வாஸ்து சாந்தியும், 19-ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றமும் நடைபெறுகின்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான ஸ்ரீமீனாட்சி பட்டாபிஷேகம் ஏப். 26-ஆம் தேதியும், திக்கு விஜயம் 27-ஆம் தேதியும், மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் 28-ஆம் தேதியும், தேரோட்டம் 29-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சியாக காலை, மாலை இருவேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது.

சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகா் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளும் உத்ஸவம் மே 1-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...