ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகள் வெளிநாட்டில் வசிக்கிறார். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் குழந்தை இல்லை. எப்பொழுது மழலை பாக்கியம் உண்டாகும்? பரிகாரம் கூறவும்..!

DIN

மழலை பாக்கியம் உண்டாகும்
 என் மகள் வெளிநாட்டில் வசிக்கிறார். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் குழந்தை இல்லை. எப்பொழுது மழலை பாக்கியம் உண்டாகும்? பரிகாரம் கூறவும்..!
 -வாசகி, சென்னை.
 உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னம், பன்னிரண்டாம் அதிபதி சனி பகவான் பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். ஐந்தாம் வீட்டிற்கும், எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான், சுக ஸ்தானத்திற்கும் பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியான யோக காரகரான சுக்கிர பகவான், சந்திர பகவானுடன் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
 களத்திர நட்பு ஸ்தானாதிபதி தன் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் மறைந்திருந்தாலும், குரு பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ஒன்பதாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார்.
 தற்சமயம் சனி பகவானின் தசையில் சுக்கிர பகவானின் புக்தி நடப்பதால் இன்னும் இரண்டாண்டுக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை பயங்கரவாதியை போல் நடத்துகிறார்கள்: பகவந்த் மான்

'ஜிஎஸ்டி' வரி அல்ல… வழிப்பறி! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

கள்ளழகர் திருவிழா: ஏப் 23-ல் மதுரைக்கு உள்ளூர் விடுமுறை

மக்களவைத் தேர்தல்: வரலாறு காணாத அளவில் பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT